
கோலாத்திரெங்கானு , மார்ச் 17 – திரெங்கானு , செத்தியுவில் கம்போங் மெர்பாவ் பகுதியில் புலி நடமாட்டம் காணப்பட்டதைத் தொடர்ந்து விழிப்புடன் இருக்கும்படி மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. செம்பனை தோட்டத்திற்கு அருகேயுள்ள காட்டுப் பகுதிக்கு செல்ல வேண்டாம் என்றும் மக்களுக்கு ஆலோசனை கூறப்பட்டுள்ளது. கால்நடை வளர்ப்பாளர் ஒருவருக்கு சொந்தமான 5 மாடுகள் காணாமல்போனதைத் தொடர்ந்து அதனை தேடிச் சென்றபோது செம்பனை தோட்டப் பகுதியில் அவரது மாடுகளில் ஒன்று மடிந்து கிடந்ததோடு மற்றொரு மாடு உயிருக்கு போராடிக்கொண்டிருந்ததைக் கண்டு அவர் அதிர்ச்சியடைந்துள்ளார். அந்த இடத்தில் புலியின் காலடி தடயங்களை கண்டு வனவிலங்குத்துறைக்கு தகவல் கொடுத்துள்ளார். சம்பவம் நிகழ்ந்த இடத்திற்கு அருகேயுள்ள Hulu Nerus பாதுகாக்கப்பட்ட வனப் பகுதியிலிருந்து அந்த மாடுகளை தாக்கிய புலி வந்திருக்கலாம் என நம்பப்படுவதாக திரெங்கானு பெர்ஹிலித்தான் இயக்குனர் Loo Kean seong தெரிவித்தார்.