
கோலாலம்பூர் , ஜூலை 7 – இந்த ஆண்டு தொடக்கத்தின் முதல் 5 மாதங்களில் பணிநீக்கம் செய்யப்பட்ட 34 பேர் உட்பட மொத்தம் 496 மூத்த மற்றும் இளைய போலீஸ் அதிகாரிகள் ஒழுங்கற்ற செயல்களில் ஈடுபட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
அதில் மொத்தம் 309 பேருக்கு எச்சரிக்கை கடிதம் , 88 பேருக்கு அபராதம் , 51 பேருக்கு ஊதிய பறிமுதல் , தொடர்ந்து 8 பேருக்கு ஊதிய உயர்வும் தள்ளுபடி செய்த நிலையில் மூன்று பேருக்கு சம்பளம் குறைப்பு மற்றும் 3 பேருக்கு பதவி இறக்கம் ஆகிவையை வழங்கப்பட்டுள்ளன.
நாட்டின் சட்டங்களை மீறும் வகையில் அல்லது குற்றச்செயல்களில் ஈடுபடும் போலீஸ் பணியாளர்களிடம் போலிஸ் படை ஒரு போதும் சமரசம் செய்து கொள்ளாது என புக்கிட் அமான் நேர்மை மற்றும் இணக்கத் துறை அதிகாரி , டத்தோ ஸ்ரீ அஸ்ரி அஹ்மட் (Datuk Seri Azri Ahmad) தெரிவித்துள்ளார்.