கோலாலம்பூர், செப்டம்பர் -21 – பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ள குளோபல் இக்வான் நிறுவனத்துக்குச் சொந்தமானதெனக் கூறப்படும் கடைகள், 5 மாநிலங்களில் மூடப்பட்டுள்ளன.
குளோபல் இக்வான் நடத்தும் சிறார் இல்லங்கள், துன்புறுத்தல், ஓரினப் புணர்ச்சி, முறைத் தவறிய சமய போதனை உள்ளிட்ட புகார்களில் சிக்கியுள்ள நிலையில், அக்கடைகள் மூடப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
உணவகங்கள், கேக் மற்றும் ரொட்டி கடைகள், மளிகைக் கடைகள், சலவைக் கடைகளும் அவற்றில் அடங்கும்.
மூடப்பட்ட கடைகளுக்கு வெளியே அறிவிப்புகள் எதுவும் வைக்கப்படவில்லை.
குளோபல் இக்வான் விஷயம் அம்பலமானது முதலே அக்கடைகளில் கூட்டம் குறைந்து, வியாபாரம் படுத்து விட்டதாக கூறப்படுகிறது.
சிலாங்கூர் மற்றும் நெகிரி செம்பிலானில் குளோபல் இக்வான் நடத்தி வரும் 20 சிறார் இல்லங்களிலிருந்து 402 சிறார்களும் பதின்ம வயதினரும் மீட்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.