
கோலாலம்பூர், மார்ச் 29 – கடந்த பிப்ரவரியில் அறிமுகப்படுத்தப்பட்ட ‘Unity’ முன்கட்டண கைபேசி இணையத் திட்டத்தின் கீழ், மாதத்திற்கு 5 ரிங்கிட் விலையில் விற்கப்படும் Sim கார்டினை இதுவரை, 31, 092 பேர் வாங்கியுள்ளனர்.
தொடர்பு இலக்கவியல் அமைச்சர் ஃபாமி பட்சில் ( Fahmi Fadzil ) இதனைத் தெரிவித்தார்.
மலேசியர்களிடையே , இலக்கவியல் இடைவெளியைக் குறைப்பதற்காக, அரசாங்கம் அறிமுகப்படுத்திய இந்த குறைந்த விலையிலான இணையச் சேவையை, Celcom, Digi, Maxis, UMobile, Telekom Malaysia, YTL Communication ஆகிய ஐந்து தொலைத் தொடர்பு நிறுவனங்கள் வழங்குகின்றன.