
பத்து காஜா, ஜன 16 – இவ்வாண்டு 5 லட்சம் வெளிநாட்டுத் தொழிலாளர்களைத் தருவிக்கும் முடிவு, உள்நாட்டு மக்களின் வேலை வாய்ப்பினைப் பாதிக்காது.
ஏனெனில், ஆசியாவின் 15 நாடுகளில் இருந்து தருவிக்கப்படும் அந்த தொழிலாளர்கள் உள்நாட்டவர்கள் வேலை செய்ய விரும்பாத துறைகளிலே வேலைக்கு அமர்த்தப்படுவர்கள் என, மனிதவள அமைச்சர் வி. சிவக்குமார் தெரிவித்தார்.
தோட்டம், விவசாயம்,கட்டுமானம் ஆகிய துறைகளில் உள்நாட்டவர்களை வேலைக்கெடுப்பதில் மிக சிரமமாக இருக்கின்றது.
அதுவும், கோவிட் கால கட்டத்தில் கிட்டத்தட்ட 7 லட்சம் வெளிநாட்டுத் தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்பி விட்டனர். எனவே குறிப்பிட்ட துறைகளில் காணப்படும் ஆட்பல பற்றாக்குறைக்கு உடனடியாக நிவர்த்தி காண்பது அவசியம். இல்லையேல் பொருளாதாரம் வளர்ச்சி காண்பது சிரமமாகுமென அமைச்சர் குறிப்பிட்டார்.