கோலாலம்பூர், பிப் 13 – நாட்டில் நேற்று வரையில் 5- லிருந்து 11 வயதுக்கு உட்பட்ட 1 லட்சத்து 35, 478 சிறார்கள் அல்லது 3.8 விழுக்காட்டினர் முதல் கோவிட் தடுப்பூசியை எடுத்துள்ளனர்.
அதே வேளை, நாட்டில் 56 விழுக்காடு பெரியவர்கள் பூஸ்டர் தடுப்பூசியை செலுத்திக் கொண்டிருப்பதாக, CovidNow அகப்பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இவ்வேளையில், 12 – 17 வயதுக்கு உட்பட்ட 89. 8 விழுக்காட்டினர் முழுமையாக கோவிட் தடுப்பூசியை போட்டுக் கொண்டுள்ளனர்.