பெய்ஜிங், அக்டோபர்-2, சீனாவைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று, 50 ஆண்டுகளுக்கு சார்ஜ் செய்யவோ அல்லது செலவு செய்து பராமரிக்கவோ அவசியமே இல்லாமல், ஒரு நாணயத்தின் அளவுக்கு மின்கலம் எனப்படும் பேட்டரியை உருவாக்கியுள்ளது.
பெய்ஜிங்கை தளமாகக் கொண்ட Betavolt எனும் அந்நிறுவனம், அப்புதிய வகை பேட்டரியை ‘அணுசக்தி பேட்டரி’ (nuclear battery) என அழைக்கிறது.
BV100 என பெயரிடப்பட்டுள்ள அந்த பேட்டரிகள், அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளின் அறிவியல் ஆராய்ச்சி கண்டுபிடிப்புகளையே முந்தும் புதியத் தொழில்நுட்பம் என Betavolt வருணித்துள்ளது.
100 மைக்ரோவாட் மற்றும் 3 வோல்ட் மின்னழுத்தத்துடன் 15x15x15 மில்லிமீட்டர் அளவைக் கொண்டுள்ள இந்த பேட்டரிகள், நிக்கலின் (Ni-63) கதிரியக்க ஐசோடோப்பைப் (isotopes) பயன்படுத்தி ஆற்றலை உற்பத்தி செய்கின்றன.
2025 ஆம் ஆண்டு வாக்கில் 1 வாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் திறன் கொண்ட அளவுக்கு அந்த தொழில்நுட்பத்தை மேம்படுத்த அந்நிறுவனம் இலக்குக் கொண்டுள்ளது.
இன்னமும் மேம்பாட்டுக் கட்டத்திலிருக்கும் அந்த பேட்டரிகள், பரிசோதனைக் கட்டத்தை முடிக்க வேண்டும்.
பிறகு தேவையான அனைத்து அனுமதிகளையும் பெற்றதும் வணிகரீதியிலான பேட்டரி உற்பத்தி தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வருங்காலத்தில் விவேகக் கைப்பேசிகளுக்கும் அவை பயன்படுத்தப்படலாம்.
அப்போது, வெளியில் செல்லுகையில் கைப்பேசிகளில் பேட்டரி தீர்ந்து விட்டதே என்ற கவலை நம்மில் பலருக்கு இருக்காது என நம்புவோம்.