
ஜெம்பூல், ஜன 24 – காலியான 500-க்கும் அதிகமான எரிவாயு கலன்களை ஏற்றிச் சென்ற ட்ரெலர் லாரி ஒன்று , Jalan Bahau – Rompin சாலையின் 17 -வது கிலோமீட்டரில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.அந்த சம்பவத்தில், 45 வயது ஓட்டுநர் லாரி முன்புறப் பகுதியில் சிக்கிக் கொண்ட வேளை, எரிவாயு கலன்கள் சாலையில் விழுந்து சிதறின.
தொடக்க விசாரணையில், கட்டுப்பாட்டை இழந்த ட்ரெலர் எதிர்சாலையில் புகுந்து சாலையோர தடுப்பை மோதி கவிழ்ந்ததாக, தெரிய வந்திருப்பதாக ஜெம்பூல் ( Jempol) மாவட்ட போலீஸ் தலைவர் ஹூ ஜங் ஹூக் ( Hoo Chang Hook) தெரிவித்தார்.