கோலாலம்பூர், ஆகஸ்ட் -26 – ஏழு பன்னாட்டு இந்திய நிறுவனங்கள் குறைந்தது 5,000 மலேசியர்களுக்கு பயிற்சியும் வேலையும் வழங்க இணங்கியிருக்கின்றன.
இலக்கயியல் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ அதனை உறுதிப்படுத்தியுள்ளார்.
பிரதமரின் அண்மைய இந்தியப் பயணத்தின் போது அது தொடர்பில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானதாக கோபிந்த் சொன்னார்.
பயிற்சியும் வேலையில் அமருவதும் மூன்றாண்டு காலத்திற்குள் நடைபெற இலக்கு வைக்கப்பட்டுள்ளது.
Gen AI அதிநவீன தொழில்நுட்பம், இணையப் பாதுகாப்பு, மென்பொருள் உருவாக்கம் மற்றும் அடுத்தத் தலைமுறை தொழில்நுட்பம் ஆகியத் துறைகளில் மலேசியர்களுக்குப் பயிற்சி வழங்கப்படும்.
அத்திட்டத்தில் பங்கேற்க மேலும் ஏராளமான நிறுவனங்களுடன் பேச்சு நடத்தப்பட்டு வருவதாக அமைச்சர் சோன்னார்.
அசுர வளர்ச்சி கண்டு வரும் டிஜிட்டல் உலகில் திறமை மிகவும் இன்றிமையாதது.
இது, இளைஞர்களுக்கு திறன்களைக் கற்றுக் கொடுப்பதிலிருந்து தொடங்குகிறது;
அதே நேரத்தில் ஆள்பலத்துறையில் உள்ளவர்களின் திறன்களும் மேம்படுத்தப்படும் என்றார் அவர்.