பெய்ஜிங்,பிப் 11 – கொடுக்கும் மனமே பெரிது என்பார்கள். ஒருவர் கொடுக்கும் அன்பளிப்பு பெரியதோ சிறியதோ , அவரவர் தகுதி ஏற்பவாறு கொடுக்கும் பொருளை ஏற்றுக் கொள்வதே நல்ல பண்பாகும். இந்த அறிவுறுத்தலை, சீனாவைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு முன் வைத்திருக்கின்றனர் வலைத்தளவாசிகள்.
சீனாவைச் சேர்ந்த பெண் ஒருவர், சீனப் புத்தாண்டின்போது, தனது காதலரின் வீட்டிற்கு சென்றிருந்தபோது, அவரது குடும்பத்தினர் வழங்கியிருந்த Ang Pow பணம் குறித்து இழிவாக பேசியிருந்தார்.
தனது காதலரின் குடும்பத்தினர் மிகவும் கஞ்சக்காரர்கள் எனவும் கூறியிருந்தார். அந்த பெண் பெற்ற Ang Pow பணம் எவ்வளவு தெரியுமா ? 5,000 ரிங்கிட்டாகும்.
அப்பெண்ணின் அந்த பதிவை அடுத்து, வீடு, சொத்து, என அனைத்தையும் உன் பெயருக்கு எழுதி வைக்கவா முடியுமென வலைத்தளவாசிகள் கேட்டுள்ளனர்.