
புத்ரா ஜெயா, மார்ச் 23 – உதவி தொகை பெற்ற 5,000 லிட்டர் டீசல் எண்ணெயை சிலாங்கூர் செமினியிலுள்ள ஒரு இடத்தில் உள்நாடு வர்த்தகம் மற்றும் வாழ்க்கை செலவின அமைச்சின் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். செவ்வாய்க்கிழமைய இரவு மணி 9.30 அளவில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின்போது 13, 250 ரிங்கிட் மதிப்புள்ள அந்த டீசல் பறிமுதல் செய்யப்பட்டதாக அமைச்சின் தலைமை இயக்குனர் Datuk Azman Adam வெளியிட்ட அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளார். அந்த எண்ணெயை பதுக்கி வைப்பதற்கும் அதனை சேமித்து வைப்பதற்கான சாதனங்கள் மற்றும் குழாய்களும் பறிமுதல் செய்யப்பட்டன.