
பேங்காக்., டிச 26 – தாய்லாந்து Khao Phra Wihanனில் உள்ள தேசிய பூங்காவை சுற்றிப் பார்க்க வந்த ஒரு பெண்ணின் கைப்பையை உணவை தேடி வந்த குரங்கு அபகறித்துச் சென்றது. அந்த பையில் 50,000 பாட் தாய்லாந்து நாணயம் வைத்திருந்ததால் அந்தப் பெண் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளானார்.
அந்த பையில் உணவுப் பொருள் எதுவும் இல்லையென்பதை அறிந்து கொண்ட அந்த குரங்கு பின்னர் அப்பையை ஆற்றோரம் தூக்கி வீசியது. தேசிய பூங்கா வனத்துறை ஊழியரின் உதவியோடு அந்த கைப்பையும் அதிலிருந்த ரொக்கப் பணத்தையும் மீட்டெடுக்க உதவியுள்ளனர். அந்த பூங்காவிலுள்ள குரங்குள் உணவுப் பொருட்கள் கிடைக்காவிட்டால் மிகவும் முரட்டுத்தனமாக செயல்படக்கூடியவை என வனத்துறை அதிகாரிகள் எச்சரித்திருக்கின்றனர்.