Latestஇந்தியா

நாற்காலி சண்டையால் நின்ற திருமணம்

உத்தப்பிரதேசம், ஜன 31 – இரு மனம் இணையும் திருமண வைபவம், பழைய காலங்கள் போல இல்லாமல், இன்று சின்ன சின்ன விஷயங்களுக்குக் கூட அடித்துக்கொண்டு இரு மண பிரிவுகளுக்கு அடிதளமாக அமைகிறது. அப்படிப்பட்ட ஒரு சம்பவம் தான் நம்மை அனைவரையும் உத்தரப்பிரதேசம் பக்கம் திருப்பியுள்ளது. 

உத்திரப்பிரதேசம் மாநிலத்தில் பாட்டிக்கு நாற்காலி கொடுக்கவில்லை என்று மணமகன் ஒருவர் திருமணத்தையே நிறுத்தியுள்ளார். விறுவிறுப்பாக திருமண ஏற்பாடுகள் தொடங்கிய நிலையில், உறவினர் ஒருவர் மணமகனின் பாட்டிக்கு உட்கார நாற்காலி கொடுக்கவில்லையாம்.

இதனால், மணமகனும் அவரது சகோதரரும் இணைந்து ரகளையில் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பாக இருவீட்டாருக்கும் அடிதடி வராத பாக்கியாக கடுமையாக வாக்குவாதம் ஏற்பட்டு ஒரு கட்டத்தில் ஆவேசமடைந்த மணமகன் தன் திருமணத்தை நிறுத்துவதாக அறிவித்திருக்கிறார். 

இதனிடையே திருமணம் நடைபெறும் இடத்திலிருந்து வெளியேற முற்பட்ட மணமகன் வீட்டாரை மடக்கி பிடித்து, திருமணத்திற்கான செலவுகளை மணமகள் வீட்டார் பெற்றுள்ளனர். 

இப்படியான காரணங்களால் கூட திருமணம் நிற்குமா என்ற கேள்வியில் வலைத்தளவாசிகள் வலம் வர, இதற்கு முன்னதாக தெலுங்கானாவில் நல்லி எலும்பு கறியால் நின்ற திருமணத்தை நம் மறந்து விட முடியுமா என்ன?

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!