
சிரம்பான், மார்ச் 29 – ரமடான் சந்தை ஏற்பாட்டிற்காக அரசியல் கட்சியை பிரதிநிதிக்கும் குறிப்பிட்ட நபரிடம் 50,000 ரிங்கிட் நிதியை பெறுவதற்கு விண்ணப்பம் செய்திருந்ததாக வெளியான தகவலை Paroi சட்டமன்ற உறுப்பினர் டத்தோ Mohamad Taufek Abd Ghani மறுத்திருக்கிறார். இது சம்பந்தமாக எந்தவொரு சந்திப்புக் கூட்டத்திலும் பங்கேற்பதற்கு தாமோ அல்லது பாரோய் சட்டமன்ற சேவை மையத்தின் பிரதிநிதியோ அழைக்கப்படவில்லையென நெகிரி செம்பிலான் ஆட்சிக்குழு உறுப்பினருமான Mohamad Taufek கூறினார். Dataran Senawang ரமடான் சந்தை ஏற்பாட்டாளரிடமிருந்து 50,000 ரிங்கிட் நிதி கோரி தாம் விண்ணப்பிக்கவில்லை என நெகிரி செம்பிலான் அமனா தேர்தல் இயக்குனருமான Mohamad Taufek தெரிவித்தார்.