Latestமலேசியா

517,000 சிறார்கள் கோவிட் தடுப்பூசிக்கு பதிவு

கோலாலம்பூர், பிப் 2 – Pfizer கோவிட் -19 தடுப்பூசி போட்டுக்கொள்வதற்காக
5 முதல் 11 வயதுடைய 517, 107 சிறார்களை அவர்களது பெற்றோர்கள் பதிவு செய்துள்ளதாக சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடின் தெரிவித்தார். மொத்தமுள்ள 36 லட்சம் சிறார்களில் இது 15 விழுக்காடை பிரதிநிதிப்பதாக அவர் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். இது நல்லதொரு தொடக்கம். தடுப்பூசி போடுவதாதன் நன்மைகள் குறித்து நாங்கள் தொடர்ந்து பெற்றோர்களுக்கு தெரிவித்து வருவோம் என கைரி தெரிவித்தார்.

இம்மாத இறுதிக்குள் மலேசிய சிறார்களில் பாதிக்கும் மேற்பட்டோர் தடுப்பூசியை செலுத்திக்கொள்வார்கள். இது தொடர்பாக துணையமைச்சர் டாக்டர் நோர் அஸ்மீ கஷாலி தலைமையிலான சிறார்களுக்கான கோவிட் 19 தடுப்பூசி பணிக்குழு கல்வி அமைச்சுடன் இணைந்து பணியாற்றி வருகிறது. நேற்றுவரை சிறார்களுக்கான தடுப்பூசிக்கு சிலாங்கூரில் மட்டும் 131,500 பேர் பதிவு செய்துள்ளதையும் கைரி ஜமாலுடின் சுட்டிக்காட்டினார். நாளை முதல் கிள்ளான் பள்ளத்தாக்கில் மருத்துவமனைகள் மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட தடுப்பூசி மையங்களில் சிறார்களுக்கான தடுப்பூசி போடும் நடவடிக்கை தொடங்கும் என இதற்கு முன் அறிவிக்கப்பது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!