புது டில்லி,மார்ச் 4 – 20-களில் திருமணம் செய்துக் கொள்ள வேண்டும். வயதான பின்னர் துணையை இழந்த ஒருவர் தனிமையிலே முதுமையை கழிக்க வேண்டும். இப்படியொரு எழுதப்படாத கட்டுப்பாடு இன்னும் சமூகத்தில் இருந்து கொண்டுதான் இருக்கிறது.
அந்த கட்டுப்பாட்டினை உடைத்து, 44 வயதில் கணவரை இழந்த தனது தாய் 52 வயதில் மறுமணம் செய்துக் கொண்ட மகிழ்ச்சியான செய்தியை அவரது மகன் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார்.
இந்திய சமூகத்தில் காணப்படும் தவறான கண்ணோட்டங்களையும் , தடைகளையும் உடைத்து எனது தாய் காமினி தான் விரும்பிய ஒருவரை மறுமணம் செய்துக் கொண்டுள்ளார் என ஜிமிட் காந்தி என்பவர் பதிவிட்டுள்ளார்.
அவரது அந்த பதிவு வைரலாகி, மறுமணம் செய்துக் கொண்டு வாழ்க்கையை மீண்டும் வாழத் தொடங்கிய தம்பதியருக்கு, சமூக வலைத்தளவாசிகள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர்.