கோலாலம்பூர், மார்ச் 5 – Intan Baiduri PPR குடியிருப்பு பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 52 வாகனங்கள் தீயூட்டப்பட்டது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வரும் போலீசார் இரண்டு சந்தேகப் பேர்வழிகளை கைது செய்தனர்.
அந்த இருவரும் பிற்பகல் 2.30 மணிக்கும் மாலை 6.30 மணிக்குமிடையே கைது செய்யப்பட்டதாக செந்தூல் மாவட்ட போலீஸ் தலைவர் துணை கமிஷனர் Beh Eng Lai தெரிவித்தார்.
31 மற்றும் 39 வயதுடைய அவ்விருவரும் Taman Intan Baiduri PPR வீடமைப்பு பகுதியில் கைது செய்யப்பட்டனர். அவர்கள் உள்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பதோடு அங்குள்ள அடுக்கு மாடி வீட்டில் குடியிருப்பவர்கள் என்றும் Beh Eng lai கூறினார்.