Latestமலேசியா

மாணவன் கொலை போலீஸ் அதிகாரி மீதான குற்ற்றச்சாட்டு உயர் நீதிமன்றத்திற்கு மாற்றம்

ஈப்போ, மார்ச் 23 – ஐந்தாம் படிவ மாணவன் ஒருவனை கொலை செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட போலீஸ் அதிகாரிக்கு எதிரான வழக்கு விசாரணை உயர்நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. குற்றஞ்சாட்டப்பட்ட Mohd Nazri Abdul Razak கிற்கு எதிரான இந்த வழக்கு விசாரணையை உயர் நீதிமன்றத்திற்கு மாற்றும்படி அரசு தரப்பு வழக்கறிஞர் Afzainizam Abdul Aziz செய்துகொண்ட விண்ணப்பத்தை மாஜிஸ்திரேட் S .Punitha அனுமதித்தார். எனினும் இந்த குற்றச்சாட்டு உயர் நீதிமன்றத்தில் மறுவாசிப்புக்கு செவிமடுக்கப்படும் தேதி குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை.

இன்று காலை 9 மணியளவில் ஈப்போ செஷன்ஸ் நீதிமன்ற அறைக்கு கையில் விலங்கிடப்பட்டு தமது முகத்தை சட்டை மற்றும் முகக் கவரியினால் மூடியிருந்த நிலையில் Mohd Nazri கொண்டு வரப்பட்டார். Muhamad Zahari Affedi என்ற மாணவனை கடந்த டிசம்பர் மாதம் 15ஆம் தேதி ஈப்போ Jati தேசிய இடைநிலைப் பள்ளிக்கு அருகே நண்பகல் மணி 12.05க்கும் 12.40க்குமிடையே Kinta மாவட்டத்தில் கொலை செய்ததாக கெடா போலீஸ் தலைமையகத்தை சேர்ந்த 45 வயதுடைய Mohd Nazri Abdul Raszak குற்றஞ்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!