
கோலாலம்பூர், ஆக 27 – ஒற்றுமை அரசாங்கம் 54,000 சீன நாட்டவர்களுக்கு மலேசிய குடியுரிமையை வழங்கவுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவலில் உண்மையில்லை என்கிறார் தொடர்பு மற்றும் பல்லூடக அமைச்சர் பாமி பாட்சில்
அந்த எண்ணிக்கை 2017ஆம் ஆண்டு முதல் 2022ஆம் ஆண்டு வரை நமக்கு கிடைத்த மலேசிய குடியுரிமை விண்ணப்பங்களின் எண்ணிக்கையாகும். இது குறித்து உள்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ சைபுடின் நசுத்தியோனும் விளக்கமளித்துள்ளார். 2017ஆம் ஆண்டு முதல் தற்போதுவரை 45 சீன பிரஜைகளுக்கு மட்டுமே மலேசிய குடியுரிமை வழங்கப்பட்டுள்ளதாக அவர் கூறியிருந்ததை மீண்டும் நினைவுறுத்தினார் பாமி பாட்சில்
இந்த குடியுரிமையும், கூட்டரசு அரசியலமைப்பின் 1964ஆம் ஆண்டு குடியுரிமை விதிமுறைகள் பின்பற்றியே வழங்கப்பட்டதாகவும் பாமி சுட்டிக்காட்டினார்.
அண்மையில், பெரிய அள்வில் சீன நாட்டவர்களுக்கு மலேசிய குடியுரிமையை மலேசியா வழங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.