
கோலாலம்பூர், ஜன 13 – கோலாலம்பூர் , ஜாலான் அம்பாங்கில் கட்டுமானத் தளத்தின் 56 -வது மாடியிலிருந்து கான்கிரீட் அச்சு விழுந்து , தோயோத்தா வியோஸ் கார் பெரும் சேதமுற்றது.
அந்த சம்பவம் இன்று காலை மணி 8.45 –க்கு நிகழ்ந்த வேளை, உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை என டாங் வாஙி மாவட்ட போலீஸ் தலைவர் Noor Delhan Yahaya தெரிவித்தார்.
சம்பவத்தின் போது அந்த கார் சில்லறை கடை ஒன்றின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததாகவும், காரின் உரிமையாளர் அந்த கடையில் இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.