Latestஇந்தியா

57-வது பிறந்தநாளை கொண்டாடிய ஷாருக் கான் வீட்டில் இரசிகர்கள் அலையென திரண்டனர்

இந்தியா, நவ 2 – இந்தியா, மும்பையிலுள்ள, பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக் கான் வீட்டு வளாகத்தில், வழக்கம் போல இவ்வாண்டும் மக்கள் கூட்டம் அலையென திரண்டது. இம்மாதம் இரண்டாம் தேதி அந்த பாலிவுட் நட்சத்திரம் தமது 57-வது பிறந்தநாளை கொண்டாடினார். அதனை முன்னிட்டு, அவருக்கு வாழ்த்து கூற திரண்ட இரசிகர்களுக்கு, Mannat எனும் தமது ஆறு மாடி ஆடம்பர வீட்டின் தடுப்பு சுவர் மீது நின்று கையசைத்து ஷாருக் கான் நன்றி தெரிவித்தார்.

ஆண்டுதோறும் ஷாருக் கானின் பிறந்தநாளின் போது இந்தியாவை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள இரசிகர்கள் அவரது இல்லத்தில் திரள்வது வழக்கமாகும். அதிகாலை தொடங்கியே, ஷாருக் கானின் வருகைக்காகவும், அவருடன் இணைந்து புகைப்படம் எடுத்துக் கொள்வதற்காகவும் பல்லாயிரக்கணக்கானோர் அங்கு திரண்டிருப்பார்கள்.

அதனால், நிலைமையை கட்டுப்படுத்தவும், அசம்பாவிதச் சம்பவங்களை தவிர்க்கவும், போலீசார் பணியில் அமர்த்தப்பட்டிருப்பார்கள். இவ்வாண்டும், வழக்கம் போல இரசிகர்களுக்கு கையசைத்து நன்றி தெரிவித்துக் கொண்ட ஷாருக் கான், அவர்களுடன் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்களை தமது இஸ்டாகிரேம் சமூக ஊடகத்திலும் பதிவிட்டுள்ளார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!