சென்னை, ஆகஸ்ட் 20 – உருவத்தை வைத்து ஒருவரை எடைபோடக்கூடாது என்பார்கள். அதற்கு ஒரு உதாரணமாய் தற்போது வலம் வந்துக் கொண்டிருக்கிறார் தமிழ்த்திரைபட நகைச்சுவை நடிகர் முத்துக்காளை.
தனது ஒல்லியான உடம்புடன் தனக்கே உரிய பாணியில் பல நடிகர்களுடன் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் இவர். பெரிய நகைச்சுவை கதாபாத்திரங்கள் இல்லாவிட்டாலும் இவருடைய பாணி மக்களை மகிழ்ச்சி படுத்தி வருகிறது.
இந்நிலையில், 58 வயதாகும் முத்துக்காளை 1 முதுகலை படிப்பை முடித்திருப்பதோடு 2வது இளங்கலை படிப்பை மேற்கொண்டுவருகிறார் என்பது தெரியுமா?
வரலாற்றுத் துறையிலி இளங்கலை, பின்னர் தமிழில் முதுகலை படிப்பை முடித்திருக்கும் இவர் தற்போது இலக்கியத்திலி இளங்கலை படிப்பை தொடர்ந்துள்ளார்.
இவை அனைத்து கடந்த 9 ஆண்டுகளில் அவர் பெற்ற பட்டங்களாகும்.
அதுமட்டுமல்லாது சிலம்பக் கலையிலும் கருப்பு பெல்ட் வைத்திருக்கிறார் இவர்.
அண்மையில் இவர் கலந்துக் கொண்ட சன் டீவியின்
டாப் குக்கு டூப் குக்கு என்று சமையல் நிகழ்ச்சியில் பங்கு கொண்ட போதுதான் அவரைப்பற்றி பலருக்கு அறிய வந்துள்ளது.
அந்தக் காணொளி தற்போது வைரலாகி எல்லோரையும் ஆச்சரியப்படுத்தி வருகிறார் முத்துக்காளை.
அந்த நிகழ்ச்சியின்போது, தன் குழந்தையை பள்ளியில் சேர்க்கும்போது பெற்றோர்களின் கல்வி அறிவு குறித்த பகுதியில் எதையும் எழுதாமல் விட்டபோது தனக்கு ஏற்பட்ட அவமானமே தன்னை இவ்வளவு படிக்க வைத்தாக கூறியிருப்பது பார்ப்போரை நெகிழ வைக்கிறது.