Latestமலேசியா

5G இணையத்தின் கட்டணம் மலிவாக இருக்கும் ; நிதியமைச்சர்

கோலாலம்பூர், நவ 25 – தற்போது நாட்டில் 4G இணையத்தின் பயன்பாட்டுக்கு விதிக்கப்படும் கட்டணத்தைக் காட்டிலும், 5G அதிவேக இணையத்துக்கான கட்டணம் அதைவிட மலிவாக இருக்குமென, நிதியமைச்சர் Tengku Datuk Seri Zafrul உறுதியளித்தார்.

5G கட்டமைப்பை மேம்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் அரசாங்கத்தின் Digital Nasional நிறுவனம், உள்நாட்டு தொலை தொடர்பு நிறுவனங்களுக்கு ஒரு Gigabyte 5G இணையத்தை 20 சென்னுக்கும் குறைவான கட்டணத்திற்கு விற்கும்.

அதையடுத்து, மலேசிய குடும்பத்தினர் 5G இணையத்தை குறைந்த கட்டணத்தில் பெறுவார்கள் என நிதியமைச்சர் கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!