Latestமலேசியா

சட்டவிரோத மோட்டார் சைக்கிள் பந்தயத்திற்காக உருமாற்றப்பட்ட 82 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்

கோலாலம்பூர், டிச 20 –  சட்டவிரோத  மோட்டார் சைக்கிள் பந்தயத்திற்காக    உருமாற்றப்பட்ட  82 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக  கோலாலம்பூர் போலீஸ் தலைவர் டத்தோ அல்லாவுதீன் அப்துல் மஜித்  தெரிவித்தார் .

 “Ops Motosikal”  மற்றும் “Ops Samseng Jalanan”  நடடிக்கையின் கீழ் அந்த மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.  இந்த மோட்டார் சைக்கிள்களில்  பின்னால் இருந்த பிரேக்குகள் அகற்றப்பட்டுள்ளன.   மோட்டார் சைக்கிளின் பின்னால்    பிரேக்  அகற்றப்படுவது    மோசமான  அல்லது உயிரிழப்பை ஏற்படுத்தக்கூடிய விபத்துக்கள் ஏற்படுவதற்கு வழிவகுக்கும் என அல்லாவுதீன் தெரிவித்தார். 

சட்டவிரோத மோட்டார் சைக்கிள் பந்தயங்களில் கலந்து கொள்ளும் இன்றைய இளைஞர்களில் பெரும்பாலோர் மோட்டார் சைக்கிளின்  பின்னால் உள்ள  பிரேக்கை  அகற்றுவதை  ஒரு வழக்கமாக கொண்டிருப்பதையும் அவர்  சுட்டிக்காட்டினார்.   இதனிடையே தாங்கள் மேற்கொண்ட   “Ops Motosikal”  மற்றும் “Ops Samseng Jalanan”  நடவடிக்கையின்போது  625 குற்றப் பதிவுகள் வழங்கப்பட்டதோடு 247 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்ப்பட்டதாகவும் அல்லாவுதீன் கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!