Latestமலேசியா

6 கிலோ கஞ்சா வைத்திருந்த கல்லூரி மாணவர் கைது !

கோலாலம்பூர், மார்ச் 31 – 6 கிலோகிராம் கஞ்சா போதைப் பொருளை வைத்திருந்த தனியார் கல்வி கூட மாணவர் ஒருவரைப் போலீசார் கைது செய்தனர்.

போலீசார் தங்களுக்கு கிடைத்த தகவலைக் கொண்டு, கோலாலம்புரில் உள்ள ஒரு தளத்தை சோதனையிட்டதில் , 21,000 ரிங்கிட் பெருமானமுள்ள கஞ்சா போதைப் பொருளைக் கைப்பற்றியதாக, கோலாலம்பூர் போலீஸ் துணைத் தலைவர் Datuk Yahaya Othman தெரிவித்தார்.

அதைத் தொடர்ந்து, 19 வயது இளைஞர் கைதானதாக அவர் கூறினார்.
பழைய குற்றப் பதிவுகள் எதுவும் இல்லாத அந்த இளைஞர் , கடந்த 3 மாதங்களாக கஞ்சா போதைப் பொருளை விநியோகித்து வந்தது விசாரணையில் தெரிய வந்ததாக Datuk Yahaya குறிப்பிட்டார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!