
சுங்கை பூலோ, ஜன 17 – உடல் ஒன்று 6 துண்டுகளாக வெட்டப்பட்டு , துணிப்பையில் திணித்து சாலையோரத்தில் வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பொது மக்கள் கொடுத்த தகவலை அடுத்து அந்த உடல் , ரவாங் செல்லும் வடக்கு தெற்கு நெடுஞ்சாலை ஓரத்தில் கண்டெடுக்கப்பட்டதாக சுங்கை பூலோ மாவட்ட போலீஸ் தலைவர் Superintendan Shafa’aton Abu Bakar தெரிவித்தார்.
இதனிடையே, போலிசார் துணிப் பைக்கு வெளியில் உடலின் சில பாகங்களை கண்டெடுத்ததாகவும், நம்பத்தகுந்த தரப்பிலிருந்து தகவல் கிடைத்துள்ளது.