Latestமலேசியா

6 மாத குழந்தை மரணம்; பெண் கைது

கோலாலம்பூர், ஆக 30- 6 மாத ஆண் குழந்தை மரணம் தொடர்பில் 34 வயது பெண் ஒருவர் கைது செய்யப்பட்டார். அந்த குழந்தையின் தாயான அந்த பெண் நேற்றிரவு மணி 8.40 அளவில் Tuanku Azizah மருத்துவமனையில் கைது செய்யப்பட்டார். இந்த விவகாரம் தொடர்பில் விசாரணைக்கு உதவும் பொருட்டு அந்த பெண்ணின் 31 வயதுடைய கணவரை போலீசார் தேடி வருவதாக அம்பாங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் பாருக் இஷாக் ( Farouk Ishak) தெரிவித்தார். படுக்கையிலிருந்து கீழே விழுந்ததால் குந்தையின் தலையில் காயம் அடைந்ததாக அதன் தாயார் கூறியிருந்தார். சில நாள் தமது கண்காணிப்பில் இருந்த பின்னரே குழந்தையை மருத்துவமனைக்கு கொண்டு வந்ததாக அவர் தெரிவித்திருந்ததையும் பாருக் இஷாக் சுட்டிக்காட்டினார். சனிக்கிழமையன்று அக்குழந்தை சுயநினைவற்ற நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டபோது அக்குழந்தையின் வலது தொடை மற்றும் கண் புருவத்தில் காயம் இருந்ததாக அவர் தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!