
கோலாலம்பூர், மார்ச் 30 – இவ்வாண்டு மத்தியில் 6 மாநிலங்களில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் தேர்தலுக்கு 420 மில்லியன் ரிங்கிட் செலவாகும் என இன்று நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இவ்வாண்டு தேர்தல் நடத்தினால் மட்டுமே இந்த தொகை செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளதாக நிதித்துறை துணையமைச்சர் டத்தோஸ்ரீ அகமட் மஸ்லான் கூறினார். இதனிடையே சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினமாக இருப்பதால் ஆறு மாநில தேர்தல்கள் அன்றைய தினம் நடத்துவது சிறப்பாக இருக்கும் என சில எம்.பிக்கள் தெரிவித்திருக்கும் ஆலோசனையும் தாம் வரவேற்பதாக அகமட் மஸ்லான் தெரிவித்தார்.