
கோலாலம்பூர், மார்ச் 29 – 6 மாநில தேர்தலின்போது, அம்னோவின் அனைத்து வேட்பாளர்களும் தராசு சின்னத்தில் போட்டியிடுவார்கள் என, அக்கட்சியின் தலைவர் டத்தோ ஶ்ரீ டாக்டர் அஹ்மாட் சாஹிட் ஹமிடி தெரிவித்தார்.
இவ்வேளையில் ஒற்றுமை அரசாங்கத்தில் உள்ள இதர கட்சி வேட்பாளர்கள், தத்தம் கட்சி சின்னங்களில் போட்டியிடுவார்கள் என அவர் கூறினார்.
எனினும், மாநிலத் தேர்தலை எதிர்கொள்வதில், ஒற்றுமை அரசாங்கத்தில் உள்ள கட்சிகள் அனைத்தும் ஒன்றாக செயல்படுமென, துணைப் பிரதமருமான சாஹிட் குறிப்பிட்டார்.