
காஜாங், ஜன 3 – ஆறு மாநிலங்களில் நடைபெறவிருக்கும் தேர்தல் குறித்து இம்மாதம் 7 ஆம் தேதி பக்காத்தான் ஹாராப்பான் கூடவிருக்கிறது. தேசிய முன்னணியுடன் இணைந்து பணியாற்றும் சாத்தியம் உட்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து அக்கூட்டத்தில் விவாதிக்கப்படும் என பி.கே.ஆர் தலைமைச் செயலாளர் Saifuddin Nasution தெரிவித்தார். பக்காத்தான் ஹராப்பான் கட்டுப்பாட்டில் உள்ள Selangor. Penang, மற்றும் Negeri Sembilan ஆகியவை உட்பட Kedah. Kelantan மற்றும் Trengganu ஆகியவவை இவ்வாண்டு தேர்தலை நடத்தவிருக்கின்றன. ஆறு மாநில தேர்தலில் தேசிய முன்னணியுடன் ஒத்துழைப்பது குறித்தும் சனிக்கிழமை நடைபெறும் பக்காத்தான் ஹராப்பான் தலைவர் மன்ற கூட்டத்தில் விவாதிக்கப்படும் என Saifuddin
தெரிவித்தார்.