குவாலா கங்சார், ஆகஸ்ட்-12, பேராக், கெரிக்கில் (Gerik) தனது அண்ணனின் 6 வயது பேரப் பிள்ளையைப் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கியதை, 54 வயது ஆடவர் நீதிமன்றத்தில் ஒப்புக் கொண்டுள்ளார்.
உறவு முறையில் தனக்கும் பேரப்பிள்ளையான அச்சிறுமியிடம் இவ்வாண்டு மத்தியில் பாலியல் சேட்டை புரிந்ததாக குவாலா கங்சார் செஷன்ஸ் நீதிமன்றத்தில் அவர் மீது குற்றச்சாட்டு கொண்டு வரப்பட்டது.
2017 சிறார் பாலியல் வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் அவர் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.
5,000 ரிங்கிட் மற்றும் ஒருநபர் உத்தரவாதத்தின் பேரில் அவரை ஜாமீனில் விடுவித்த நீதிபதி, வழக்கு முடியும் வரை சாட்சியைத் தொந்தரவு செய்யக் கூடாதென்ற கூடுதல் நிபந்தனையையும் விதித்தார்.
வழக்கு செப்டம்பர் 12-ஆம் தேதி மறுசெவிமெடுப்புக்கு வருகிறது.
தீர்ப்பு எப்போது அறிவிக்கப்படுமென உறுதியாகத் தெரியவில்லை.