ஷா அலாம், பிப் 23 – கோலாலம்பூரிலிருந்து கிள்ளான் செல்லும் கூட்டரசு நெடுஞ்சாலையின் 15. 7ஆவது கிலோமீட்டரில் ஆறு வாகனங்கள் சம்பந்தப்பட்ட விபத்தில் மோட்டார் சைக்கிளோட்டி ஒருவர் மரணம் அடைந்தார்.
20 வயதுடைய அந்த ஆடவர் இரவு ஏழு மணியளவில் வேலைக்கு சென்று கொண்டிருந்தபோது விபத்தில் சிக்கி மாண்டதாக ஷா ஆலாம் மாவட்ட போலீஸ் தலைவர் துணை கமிஷனர் Baharudin Mat Taib தெரிவித்தார்.
அந்த விபத்தில் Proton Iriz கார், Honda City, Mercedez , Toyota மற்றும் Myvi ஆகிய கார்களும் சம்பந்தப்பட்டிருந்தன.