கோலாலம்பூர், பிப் 7 – கடந்த ஜனவரி 25-ஆம் தேதியிலிருந்து ஞாயிற்றுக்கிழமை வரையில், சீனப் புத்தாண்டை முன்னிட்டு கோலாலம்பூர் JPJ சாலை போக்குவரத்து துறை பல்வேறு சாலை குற்றங்களுக்காக 6,130 சாலை குற்றப் பதிவுகளை வெளியிட்டது.
அந்த சோதனை நடவடிக்கையின்போது 18,435 வாகனங்கள் சோதனையிடப்பட்டதாகவும், அவற்றில் 2,919 வாகனமோட்டிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் JPJ ஓர் அறிக்கையின் வாயிலாக தெரிவித்தது.
பெரும்பாலும், சாலை வரி , வாகன காப்புறுதி இல்லாத குற்றங்களுக்காகவே அதிகமானோர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.