Latestமலேசியா

6.94 மில்லியன் டாலர் கையாடல்; எம்.ஏ.சி.சி அதிகாரிக்கு 3 ஆண்டு சிறை; 2 பிரம்படி

கோலாலம்பூர், பிப் 18 – 6.94 மில்லியன் அமெரிக்க டாலரை கையாடிய MACC அதிகாரி Shahrum Nizam மிற்கு மூன்று ஆண்டு சிறை மற்றும் இரண்டு பிரம்படி விதிக்கப்பட்டது. மலேசிய வெளிநாட்டு உளவுப் பிரிவு இயக்கத்தின் முன்னாள் தலைவர் Hasanah Ab Hamid டிட்மிருந்து மலேசிய ஊழல் தடுப்பு நிறுவனமான MACC பறிமுதல் செய்த அந்த தொகையை கையாடியதாக செஷன்ஸ் நீதிமன்றத்தில் கொண்டுவரப்பட்ட திருத்தப்பட்ட குற்றச்சாட்டை Shahrum Nizam ஒப்புக்கொண்டார். இதற்கு முன் அவருக்கு எதிராக நம்பிக்கை மோசடி குற்றச்சாட்டு கொண்டு வரப்பட்டது.

தண்டனைச் சட்டத்தின் 403ஆவது விதியின் கீழ் குறைந்த தண்டனையின் கீழ் கொண்டுவரப்பட்ட குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து Shahrum Nizam மிற்கு 3 ஆண்டு சிறை மற்றும் 2 பிரம்படி விதிப்பதாக செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி Suzana Hussin தீர்ப்பளித்தார்.

கடந்த 2018 ஆம் ஆண்டு டிசம்பர் 17ஆம் தேதிக்கும் 2019ஆம் ஆண்டு ஏப்ரல் 9 ஆம் தேதிக்குமிடையே MACC தலைமையகத்தில் அவர் இக்குற்றத்தை புரிந்தாக கூறப்பட்டது. தற்போது அபாயகரமான போதைப் பொருள் சட்டத்தின் கீழ் ஜோகூர் சிம்பாங் ரெங்கம் சிறையில் இரண்டு ஆண்டு கால சிறைத் தண்டனையை Shahrum Nizam அனுபவித்து வருகிறார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!