Latestஉலகம்

60 லட்சத்துக்கும் அதிகமானோர் பசி பட்டினியால் தவிப்பு

ஸ்ரீ லங்காவில், 62 லட்சத்துக்கும் அதிகமானோர் உணவு பற்றாக்குறை பிரச்சனையை எதிர்நோக்கியுள்ளனர்.

சமூக உதவி திட்டங்கள் அல்லது உதவி தொகை திட்டங்கள் அறிவிக்கப்படாவிட்டால் நிலைமை மேலும் மோசமடையலாம் என அஞ்சப்படுகிறது.

ஸ்ரீ லங்காவின் மொத்த மக்கட் தொகையில், 28 விழுக்காட்டினர் அல்லது 62 லட்சத்துக்கும் அதிகமானோர் உணவு பற்றாக்குறை பிரச்சனைக்கு இலக்காகியுள்ளனர்.

இதர அறுபத்து ஆறாயிரம் பேர் பசி பட்டினியால் வாடுவதாக, ஐநாவின் விவசாய – உணவு அமைப்பும், உலக உணவு திட்டமும் கூட்டு அறிக்கையின் வாயிலாக தெரிவித்தன.

இறக்குமதி குறைந்து வருவது, பொருட்களின் விலை ஏற்றம், வேலை இல்லா திண்டாட்டம், விளைச்சல் குறைவு ஆகியவற்றால் அந்நாட்டின் உணவு பாதுகாப்பும் தொடர்ந்து பின்னடைவை எதிர்நோக்கி வருகிறது.

இந்நிலையில், அடுத்த மாதத்திற்கும், 2022-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்திற்கும் இடைப்பட்ட காலத்தில் நிலைமை மேலும் மோசமடையலாம் என ஐநா கூறியுள்ளது.

அதனால், அரசாங்கமும் அதன் பங்காளி நிறுவனங்களும், மக்களுக்கு தேவையான சமூக நல – உதவித் தொகை திட்டங்களை வழங்க வேண்டும்.

1948-ஆம் ஆண்டு பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து சுதந்திரம் பெற்றதிலிருந்து, ஸ்ரீ லங்கா மிக மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கியிருப்பது இதுவே முதல் முறையாகும்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!