Latestஉலகம்

60 வயதில் அதிர்ஷ்டம் ; மாடலான தினசரி கூலி தொழிலாளி

கோழிகோடு, பிப் 16 – அதிர்ஷ்டம் ஒருவருக்கு எப்படி எப்போது வரும் என்று தெரியாது. அதற்கு உதாரணம் கேரளா, கோழிக்கோடைச் சேர்ந்த 60 வயது ஆடவர் மம்மிக்கா -வின் ( Mammikka ) வாழ்க்கை.

நிறம் வெளுத்துப் போன கைலியும் சட்டையும் அந்த ஆடவரின் அடையாளமாக இருந்த வேளை, ஒரே நாளில் அவரது தோற்றமே உருமாறிப் போனது.

கையில் Ipad -டுடன், கோட்டு சூட்டில் கெத்தாக நடந்து வரும் மம்மிக்காவின் காணொளியே தற்போது சமூக வலைத்தளங்களில் பிரபலம். தினசரி கூலிக்கு வேலை செய்து வந்த அவர் , புகைப்படக்காரர் ஒருவரின் கண்ணில் பட தற்போது நிறுவனமொன்றின் மாடலாகியிருக்கின்றார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!