
வாஷிங்டன், செப் 16 – 61 நாள் அறுவை சிகிச்சைக்குப் பின்னர், மனிதன் ஒருவருக்குப் பன்றியின் சிறுநீரகத்தைப் பொறுத்தி சாதனை படைத்துள்ளனர் அமெரிக்க மருத்துவர்கள். மூளை இறந்த நோயாளிக்கு மரபணு மாற்றப்பட்ட பன்றியின் சிறுநீரகத்தைப் பொறுத்தப்பட்டுள்ளது.
மனிதன் மற்றும் மிருகங்களுக்கு இடையே உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கான ஆராய்ச்சியின் ஒரு பகுதியாக இந்த அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
அமெரிக்காவில் மட்டும் 103,000 அதிகமானோர் உடல் உறுப்பு மாற்று சிகிச்சைக்காக காத்திருக்கின்றனர். அவர்களில் பெருபாலோருக்கு மாற்று சிறுநீரகம் தேவைப்படுகிறது.
இப்படி உடல் உறுப்புகளின் தேவை அதிகமாகிக் கொண்டிருக்க, உலக நாடுகள் பல மிருகங்களுக்கும் மனிதர்களுக்கும் இடையே உள்ள உறுப்பு ஒற்றுமைகளை ஆராய்ந்து அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டு வருகின்றன. சில அறுவை சிகிச்சைகள் வெற்றி பெற்று பின்னர் நோயாளிகள் கொஞ்ச காலம் கழித்து இறந்த சம்பவங்கள் நிகழ்ந்திருந்தாலும், இது குறித்து தொடர் ஆராய்ச்சிகள் நடந்துக் கொண்டுதான் இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.