
ஜோகூர் பாரு, ஆக 5 – ஜோகூர் மாநில கலை மற்றும் இசை ஆர்வலர்கள் நற்பணி மன்றத்தின் ஏற்பாட்டில் பல இனங்களையும் சேர்ந்த மலேசிய மற்றும் சிங்கப்பூரைச் சேர்ந்த 153 பாடகர்கள் கலந்துகொண்ட இசை நிகழ்ச்சி அண்மையில் மிகவும் சிறப்பாக 61 மணி நேரம் இடைவிடாமல் நடைபெற்றது. மாசாயிலுள்ள டத்தோஸ்ரீ டாக்டர் ராஜசேகரன் இசையரங்கத்தில் அந்த நிகழச்சி நடைபெற்றது. ஜோகூர் மாநில கலை மற்றும் இசைஆர்வலர்கள் நற்பணி மன்றத்தின் டத்தோஸ்ரீ டாக்டர் ராஜசேகரனின் முழுமையான ஏற்பாட்டுச் செலவில் அந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.
ஸ்ரீ மாஜூ மேனேஜ்மென்ட் சென்.பெர்ஹாட், டாக்டர் தனபாலன் முருகையா, டாக்டர் தனபலன் கோபால்ராஜ், டத்தோ நாகராஜூ தாத்தையா ஆகியோரும் ஸ்போன்சர்களாக இருந்த இந்த நிகழ்ச்சிக்கு டத்தின்ஸ்ரீ வசந்தி, டத்தோஸ்ரீ டாக்டர் சிவராஜா ஆகியோர் ஆலோசகர்களாக பணியாற்றி இந்த நிகழ்ச்சி வெற்றி பெறுவதற்கு முழு ஒத்துழைப்பு நல்கியதாக அந்த நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளராக பணியாற்றிய இதயக்கனி சுகுமாறன் தெரிவித்தார். இரண்டு மாத கால ஏற்பாட்டிற்குப் பின்னர் இந்த நிகழ்ச்சி வெற்றிகரமாக நடைபெற்றதாகவும் ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் அவர் தமது நன்றியையும் தெரிவித்துக் கொண்டார்.