
புத்ரா ஜெயா, ஜன 26 – செம்பனை தோட்டத் தொழில்துறையில் 63,000 வெளிநாட்டு தொழிலாளர்கள் பற்றாக்குறை காரணமாக அந்த தொழில்துறை பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக துணைப்பிரதமர் Fadillah Yusof தெரிவித்திருக்கிறார். இதனால் கடந்த ஆண்டு மட்டும் நாடு 20 பில்லியன் ரிங்கிட் வருமான இழப்பை எதிர்நோக்கியதாக தோட்ட மற்றும் மூலப்பொருள் அமைச்சருமான Fadillah கூறினார். இந்த நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்காக நாட்டிற்குள் வெளிநாட்டு தொழிலாளர்கள் எளிதாக நுழைவதற்கான நடைமுறைகளை எளிமைப்படுத்துவது மற்றும் சட்டவிரோத தொழிலாளர்களுக்கு மீண்டும் வேலை வாய்ப்பு வழங்குவதற்கும் அரசாங்கம் அனுமதித்துள்ளதாக அவர் கூறினார்.