
கோலாலம்பூர், மே 25 – முன்னாள் பிரதமர் டான்ஸ்ரீ முஹிடின் யாசின் மகன் சம்பந்தப்பட்ட விசாரணையில் 400,000 ரிங்கிட் லஞ்சம் கோரியது தொடர்பில் டத்தோ Roy எனப்படும் வர்த்தகரான Mohd Hussein Mohd Nasir மற்றும் எம்.ஏ.சி.சி அதிகாரியான Mohd Rashyidi Mohd Said ஆகியோர் மீது கூட்டாக குற்றஞ்சாட்டப்பட்டது. 54 வயதுடைய டத்தோ Roy மற்றும் 43 வயதுடைய Mohd Rasyidi Mohd Said ஆகியோர் தங்களுக்கு எதிரான குற்றச்சாட்டை மறுத்தனர். எம்.ஏ. சி.சியின் விசாரணைக்கு உள்ளான முஹிடின் மகன் டத்தோ Fakhr Yassin னை கைது செய்யாமல் இருப்பதற்காக தங்களுக்கு 400,000 லஞ்சம் வழங்க வேண்டும் என அவர்கள் கோரியதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. Siti Dalena Berhan என்பவரிடம் அந்த லஞ்சப் பணத்தை அவர்கள் கோரியதாக கூறப்பட்டது. மார்ச் 5ஆம் தேதி பங்சார். Lorong Kurau வில் Steakhouse சில் இரவு 9 மணி முதல் 11மணிக்குமிடையே டத்தோ Roy மற்றும் Mohd Rasyidi Mohd Said ஆகியோர் லஞ்சம் கேட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டது.
விசாரணயின்போது Fakhri Yassin கைது செய்யப்படாமல் இருப்பதற்காக ஊக்குவிப்பு தொகையாக Syed Farid Syed Al – Attas சிடமிருந்து 240 ,000 ரிங்கிட் லஞ்சத்தை பெற்றதாக அவ்விருவர் மீதும் இரண்டாவது குற்றச்சாட்டு கொண்டு வரப்பட்டது. மார்ச் 6 ஆம் தேதி Desa Sri Hartamas சிலுள்ள விரைவு உணவத்தில் நண்பகல் 2 மணிக்கும் மாலை 4 மணிக்குமிடையே இந்த குற்றத்தை அவர்கள் புரிந்ததாக கூறப்பட்டது, பிப்ரவரி மாதம் Kampung Melayu Kepong என்னுமிடத்தில் Siti Dalene மற்றும்
Syed Farid ட்டிடம் 2மில்லியன் ரிங்கிட் லஞ்சம் கேட்டதாக ரோய் மீது மற்றொரு குற்றச்சாட்டும் கொண்டு வரப்பட்து.