கோலாலம்பூர், பிப் 9 – முன்னாள் பிரதமர் டத்தோ ஶ்ரீ நஜீப் துன் ரசாக், நாட்டிலுள்ள தனது 68 கோடியே 10 லட்சம் டாலர் வரையிலான சொத்துகளை மாற்றவோ, கையாளவோ உயர்நீதிமன்றம் தடை உத்தரவை பிறப்பித்துள்ளது.
அத்துடன், தனது வங்கி கணக்கிலிருந்து, அன்றாட வாழ்க்கை செலவுக்காகவும், வழக்கறிஞர் சேவைக்காகவும் மாதத்திற்கு 1 லட்சம் ரிங்கிட்டுக்கும் மேற்பட்ட தொகையை எடுக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
நஜீப் மீதும் 1MDB நிறுவனத்தின் முன்னாள் நிர்வாகத்தின் மீதும், 1MDB நிறுவனமும் அதன் நான்கு துணை நிறுவனங்களும் 800 கோடி டாலர் தொகையை உட்படுத்திய சிவில் வழக்கைத் தொடுத்துள்ளன. அந்த வழக்கின் தீர்ப்பு தெரிய வரும் வரையில், நஜிப்பின் குறிப்பிட்ட தொகையிலான சொத்துகளின் முடக்கம் தற்காலிகமாக அமலில் இருக்குமென கூறப்பட்டுள்ளது.