6,800 டாலர் மதிப்புடைய துணிகளை திருடியதன் தொடர்பில் 3 பெண்கள் உட்பட10 பேர் சிங்கையில் கைது

சிங்கப்பூர், நவம்பர் 1 – சிங்கப்பூரில் ஆர்ச்சர்ட் (Orchard) சாலை மற்றும் ஹார்பர்பிரான்ட் வால்க் (HarbourFront Walk) ஆகிய இடங்களில் உள்ள கடைகளில் சுமார் S$6,800 சிங்கப்பூர் டாலர் ( RM23, 686.35) மதிப்புள்ள உடைகளை திருடியதில் சம்பந்தப்பட்ட 20 முதல் 32 வயதுடைய ஏழு ஆண்களும் மூன்று பெண்களும் கைது செய்யப்பட்டனர். அந்த சந்தேகப் பேர்வழிகளிடமிருந்து 90 க்கும் மேற்பட்ட துணிகளை தாங்கள் பறிமுதல் செய்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர். அந்த திருட்டு எங்கு நடந்தது என்பது குறித்து சரியான இடத்தின் அடையாளத்தை போலீசார் தெரிவிக்கவில்லை. ஆனால் ஹார்பர்பிரான்ட் வால்க் என்பது விவோசிட்டி (VivoCity) வர்த்தக மையத்தின் முகவரியாகும். அக்டோபர் 16ஆம் தேதி ஆர்ச்சர்ட் சாலையில் திருட்டு முயற்சி நடந்ததாக போலீஸ் துறைக்கு முதலில் தகவல் கிடைத்தது.
டாங்லின் மற்றும் கிளெமென்டி போலீஸ் பிரிவைச் சேர்ந்த போலீஸ் அதிகாரிகள், விரிவான விசாரணைகள், போலீஸ் கேமராக்கள் மற்றும் கண்காணிப்பு காட்சிகள் மூலம் சம்பந்தப்பட்ட 10 நபர்களின் அடையாளங்களை கண்டனர்.
இதனைத் தொடர்ந்து அக்டோபர் 30 ஆம் தேதி திருட்டு நடவடிக்கைக்காக அவர்கள் கைதுசெய்யப்பட்டனர். அவர்கள் கூடுதலாக வீட்டில் திருடியதற்காகவும் கைது செய்யப்பட்டனர். திருடப்பட்டதாக நம்பப்படும் 90 க்கும் மேற்பட்ட ஆடைகளும் அவர்களிடமிருந்து மீட்கப்பட்டன. அவர்கள் திருடிய உடைகளின் மொத்த மதிப்பு சுமார் 6,800 சிங்கப்பூர் டாலர்கள் என்று போலீசார் தெரிவித்தனர். ஏழு ஆண்டுகள்வரை சிறைத்தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும் சட்டத்தின் கீழ் அவர்கள் மீது குற்றஞ்சாட்டப்படும்
தெரிவிக்கப்பட்டது.