
இந்தியா, ஆகஸ்ட்டு 25 – இந்திய திரையுலகின் மிகவும் முக்கியமான அங்கீகாரமாக தேசிய விருது விழா கருதப்படுகிறது.
69-வது இந்திய திரைப்பட விருது விழாவின் வெற்றியாளர்கள் நேற்று மாலை, புது டெல்லியில் அறிவிக்கப்பட்டனர்.
அதில், ஆர்.மாதவனின், “Rocketry : The Bambi Effect” சிறந்த திரைப்படம் எனும் அங்கீகாரத்தை பெற்ற வேளை ; சிறந்த தமிழ்ப் திரைப்படத்துக்கான விருதை, இயக்குனர் எம். மணிகண்டனின் “கடைசி விவசாயி” வென்றது.
மணிகண்டன், 2015-ஆம் ஆண்டு, தனது “காக்கா முட்டை” திரைப் படத்திற்காக தேசிய விருதை வென்றவர் ஆவார்.
கடைசி விவசாயி திரைப்படத்தில், தனித்துவமாக வாழ்ந்து காட்டியிருந்த, காலஞ்சென்ற 85 வயது ஸ்ரீ நல்லாண்டியை, நீதிபதிகள் குழுவினர் பாராட்டி சிறப்பு அங்கீகாரத்தை வழங்கினர்.
சிறந்த நடிகருக்கான விருதை புஷ்பா திரைப்படத்திற்காக, அல்லு அர்ஜுன் வென்ற வேளை ; கங்குபாய் கத்தியவாடி மற்றும் மிமி படங்களுக்காக ஆலியா பட், கிருத்தி சனோன் இருவரும் சிறந்த நடிகைக்கான விருதை பகிர்ந்து கொண்டனர்.
ஆர்.பார்த்திமன் இயக்கத்தில் வெளியான “இரவின் நிழல்” படத்தில் இடம் பெற்ற “மாயவா சாயவா” எனும் பாடலை பாடி இருந்த சிரியா கோஷல், சிறந்த பாடகிக்கான விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டார்.
தமிழ் இயக்குனர் விஷ்ணு வர்தன் முதல் முறையாக இயக்கிய “Shershaah” இந்தி திரைப்படம், சிறப்பு ஜூரி விருதை வென்ற வேளை ; ஆர். லெனின் இயக்கிய “சிற்பங்களில் சிற்பங்கள்” சிறந்த கல்வி திரைப்படம் எனும் அங்கீகாரத்தை பெற்றது.
அந்த திரைப்படத்திற்கு இசையமைத்த ஸ்ரீகாந்த் தேவா பாராட்டுகளை பெற்றார்.
இவ்வேளையில், இவ்வாண்டு தொடக்கத்தில் ஆஸ்கார் விருதை வென்ற, ராஜமெளலியின் RRR திரைப்படம், ஆறு பிரிவுகளில் விருதுகளை தட்டிச் சென்றது.