மலாக்கா , ஜூன் 23 – கஞ்சில் கார் ஒன்று கவிழ்ந்து லோரியில் மோதியதில் 7 வயது மாணவி இறந்தார். அந்த மாணவி பள்ளிக்கு சென்று கொண்டிருந்தபோது இந்த துயரச் சம்பவம் மலாக்கா தெங்கா, Tampoi , Jalan Krubong கில் இன்று காலை மணி 8.15 அளவில் நிகழ்ந்தது.
பள்ளி சீருடையுடன் காணப்பட்ட Nurul Qalisha Abdul Rahim என்ற அந்த மாணவி விபத்து நிகழ்ந்த இடத்திலே இறந்தார். தனது தந்தையின் உறவினரின் கஞ்சில் காரில் நுருல் பயணம் செய்தபோது அக்கார் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதாக மலாக்கா குற்றவியல் விசாரணை மற்றும் போக்குவரத்து அமலாக்கத்துறையின் தலைவர் சூப்ரிடெண்டன் அம்ரான் முகமட் ஷாக்கி தெரிவித்தார்.