
பூச்சோங் செப் 28 – பூச்சோங்கில் பெண்ணை பலாத்காரம் செய்ததாக நம்பப்படும் வெளிநாட்டு சாமியாரை கடந்த சனிக்கிழமை போலீசார் கைது செய்தனர்.
40 வயது மதிக்கத்தக்க அந்த வெளிநாட்டு சாமியாரை விசாரணைக்கு உதவ ஏழு நாள் தடுப்பு காவலில் அவர் வைக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். கடந்த மாதம் 30 வயதுக்கு உட்பட்ட பெண் கொடுத்த புகாரில், தன்னை வலுக்கட்டாயமாக அந்த சாமியார், வாகனத்தில் பலவந்த படுத்தியததாக அவர் குறிப்பிட்டிருந்தார்.
பாதிக்கப்பட்டவரின் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், விசாரணைக்கு உதவும் வகையில் சம்பந்தப்பட்ட சாட்சிகளையும் போலீசார் கண்காணித்து வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.