கன்டஹார் , பிப் 18 – ஆப்கானிஸ்தானில் ஆள்துளைக் கிணற்றுக்குள் விழுந்த சிறுவனை மீட்கும் 70 மணி நேர போரட்டம், சோகத்தில் முடிந்திருக்கிறது.
பெரிய கல் ஒன்று தடையாக இருந்ததால், அச்சிறுவனை மீட்பதில் சிரமத்தை எதிர்நோக்கியிருந்த மீட்பு பணியாளார்கள், இறுதியில் அச்சிறுவனை இறந்த நிலையிலே கண்டெடுத்தனர்.
உயிரிழந்த சிறுவனான ஹய்டர், வறட்சி ஏற்பட்டுள்ள தங்களது கிராமத்தில் பெரியவர்களுடன் சேர்ந்து புதிய குழியைத் தோண்ட உதவியபோது, அக்குழிக்குள் தவறி விழுந்ததாக, அச்சிறுவனின் தாத்தா கூறியுள்ளார்.