ஷா அலாம், பிப் 21 – சிலாங்கூரில் வெள்ளப் பேரிடரால் பாதிக்கப்பட்ட 72, 451 குடும்பத்திற்கு திங்கட்கிழமைவரை 72.58 மில்லியன் ரிங்கிட் உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளது.
சிலாங்கூர் உதவித் திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்ட 100 மில்லியன் ஒதுக்கீட்டில் ஒரு பகுதியாக அந்த தொகை வழங்கப்பட்டதாக சிலாங்கூர் மந்திரிபெசார் டத்தோஸ்ரீ அமிருதீன் ஷாரி கூறினார்.
வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்திற்கும் சிலாங்கூர் அரசாங்கத்தின் உதவித் தொகையாக 1,000 ரிங்கிட் உதவித் தொகை வழங்கப்பட்டது.
கிள்ளானில் வெள்ளத்தின்போது குடும்ப உறுப்பினர்களை இழந்த ஆறு குடும்பத்தினர் உட்பட 23,450 குடும்பத்தினர் 23.51 மில்லியன் ரிங்கிட்டை பெற்றனர்.
அதிக அளவில் உதவித் தொகை வழங்கப்பட்ட மாநிலமாக கிள்ளான் திகழ்கிறது. அதனை அடுத்து பெட்டாலிங் மாவட்டத்தில் 17,917 குடும்பத்தினரும், கேலாலங்காட்டில் 10,282 குடும்பத்தினரும் உதவித் தொகையை பெற்றுள்ளனர்.