
கோலாலம்பூர், பிப் 1- UCSI பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் , இந்நாட்டில் 73 விழுக்காடு இளைஞர்கள் கடன்பட்டிருப்பதாக தெரிய வந்திருக்கிறது.
1,077 பேரை உட்படுத்திய அந்த ஆய்வு, முக்கால் பகுதியினர் நிதி சார்ந்த தேவைகளைப் பூர்த்திச் செய்ய போதிய மூலதனத்தை வைத்திருக்கவில்லை என்பதையும் காட்டியுள்ளது.
கடன் பெற்றிருக்கும் அந்த இளைஞர்களின் எண்ணிக்கை கவலையளிக்கும் வகையில் இருந்தாலும், அவர்களில் 93 விழுக்காட்டினர் குறிப்பிட்ட நேரத்தில் வாங்கிய கடனை திரும்பச் செலுத்தும் ஆற்றலை கொண்டிருப்பதாக, அப்பல்கலைக்கழக ஆய்வு குறிப்பிட்டுள்ளது.