Latestஉலகம்மலேசியா

8 கார்கள் திருடப்பட்டன; முன்னாள் கைதி பிடிபட்டான்

கோலாலம்பூர், ஜூன் 8 – கோலாலம்பூர் செராசில் 8 கார்களை திருடியதன் தொடர்பில் முன்னாள் கைதி ஒருவனை போலீசார் கைது செய்தனர். உள்நாட்டைச் சேர்ந்த அந்த 46 வயது சந்தேக நபர் கடந்த வெள்ளிக்கிழமைத்தான் காஜாங் சிறைச்சாலையிலிருந்து விடுதலை செய்யப்பட்டான். கடந்த ஆறு மாதங்களுக்கு முன் செராஸ் வட்டாரத்தில் ஆறு கார்கள் கொள்ளையடிக்கப்பட்டதன் தொடர்பில் Sri Sabah அடுக்கு மாடி குடியிருப்பில் அந்த நபர் கைது செய்யப்பட்டதாக செராஸ் மாவட்ட போலீஸ் தலைவர் Muhammad Idzam Jaafar தெரிவித்தார். செராஸ், புடு, ஸ்ரீ பெட்டாலிங் மற்றும் பேராவில் தெலுக் இந்தான் பகுதியில் கார் திருட்டுச் சம்பவங்களில் அந்த நபருக்கு தொடர்பு இருப்பதாக அவர் கூறினார். அதோடு அந்த சந்தேக நபரிடமிருந்து நான்கு புரோட்டோன் ஈஸவரா, இரண்டு புரோட்டோன் சகா, ஒரு வேன் மற்றும் புரோட்டோன் வீரா என 8 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டதாக Mohammad Idzam தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!