Latestமலேசியா

8 குற்றப்பதிவுகளைக் கொண்ட பலே ஆசாமி வைரலான உலு திராம் சலவை இயந்திர திருட்டில் போலீசிடம் சிக்கினான்

ஜோகூர் பாரு, ஆகஸ்ட்-5, ஏற்கனவே 8 குற்றப்பதிவுகளைக் கொண்டிருந்த ஓர் ஆடவன், ஜோகூர், உலு திராமில் சலவை இயந்திர திருட்டில் போலீசிடம் சிக்கியுள்ளான்.

தாமான் டேசா ச்செமர்லாங்கில் (Taman Desa Cemerlang) சனிக்கிழமை பிற்பகல் 1.30 மணிக்கு அச்சம்பவம் நிகழ்ந்தது.

சலவைக் கடையின் உரிமையாளரான 33 வயது பெண் கொடுத்த புகாரைத் தொடர்ந்து போலீஸ் விரைந்து செயல்பட்டு அவ்வாடவனைப் பிடித்தது.

சம்பவத்தன்று இரவு 11 மணி வாக்கில் சிக்கிய 23 வயது அவ்விளைஞனிடமிருந்து, பெரோடுவா அக்சியா காரையும், ஒரு சலவை இயந்திரத்தையும் போலீஸ் பறிமுதல் செய்தது.

சந்தேக நபர் விசாரணைக்காக 4 நாட்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளான்.

மின்சாரப் பொருட்களை விற்கும் கடையின் பக்கத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட அக்சியா காரின் பின்பகுதியில் 2 ஆடவர்கள் சலவை இயந்திரத்தை நுழைக்க முயலும் 6 வினாடி வீடியோ முன்னதாக வைரலானது குறிப்பிடத்தக்கது.

உடனிருந்தவன் குறித்து தகவல் இல்லை.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!